கற்பு எடுக்கப்படவேண்டியதா கொடுக்கப்படவேண்டியதா
இரண்டுமே தவறாகப் புலப்படுவது ஏன்
ஆணவன் எடுத்தால் பிழையெனின்
கனவனுக்குக் கொடுத்தால் சரியா
பெண்ணவள் மறுத்தால் பிழையெனின்
முந்தானை விரித்தாள் சரியா
அவனுக்கு மட்டும் பறிக்க உரிமையுண்டா
வைத்திருப்பவளுக்கு இழக்க உரிமையிலையோ
பொத்தி மட்டுமே வைத்திருப்பாள் பத்தினியோ
உடற்பசி அடக்க உறுப்பை நுழைத்தவன் தேவரெனில்
உடலிற் தேவை அடக்கினார் தேவரடியாலோ
வைத்திருக்க மட்டுமே உரிமையெனின்
எந்த பெண்தெய்வமும் பத்தினியன்றேல்
கற்பென்ற சொற்கூறினான் மூடகுலத்தவன்
ஓர் சொல்லில் சிறையுண்டாகி மாண்டான் பாவி
சிறைக்கதவு திறந்தும் வெளிவரத்
தயங்குவாள் பரிதாபப் பத்தினி

பெண் ஆணுக்காக பிறந்தவளா ஆணால் (ஆனால்) பிறந்தவளா
கலியுக கார் இருளில் ஆணென்ன பெண்ணென்ன
எல்லாம் சதையொட்டி பிறந்த மண்பாண்டங்கள்
மண்ணுக்கு இரையெனப் போகும்
அற்பப் பிறவியின் நோக்கம்
தீனியும் கலவியும் மட்டுமே

பெண் உடல் தேடுவோன் இட்சையென்பார்
மறைக்க தெரிந்தவன் பெண்ணியம் பேசுவான்
ஆணவன் வேண்டுவோள் பாதகியென்பார்
ஆணவன் வேண்டினாள் பத்தினியென்பார்

உடற் பசி அற்றவன் தன்
பசி அறிந்தவன் ஆவான்

கூற்றுக்கு இரையாகும் அற்ப மிச்சங்களே
வந்த வழிதேடும் காமக்கூட்டங்களே
சதைதேட தூண்டும் ஒரு நொடி
நீ வந்த உறுப்பு வழி எண்ணிப்பார்
ரா
- பெண்ணியம் பேசும் மற்றொரு பிண்டம்

Comments

Popular posts from this blog

Humans of Chennai - Madras Manidhargal - Kids - 01

Introduction of an individual

Humans of Chennai - Madras Manidhargal - 04